(நா.தனுஜா)
இலங்கை வணிகங்கள் ஆக்கபூர்வமான விளைவுகளையும், சிறப்பான சமூக இணக்கத்தையும் அடைந்துகொள்ள விரும்பினால், அதற்கேற்றவாறான சமத்துவமானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான உத்திகளைத் தயாரிப்பதற்கு அவை எல்லைகளுக்கு அப்பால் சென்று சிந்திக்கவேண்டுமென இலங்கை ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனி வெளிவிவகார அலுவலகம் ஆகியவற்றின் நிதியுதவியின்கீழ் இலங்கை ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கையில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தல் அமைப்பு என்பன இணைந்து முன்னெடுத்த ஆய்வின் முடிவுகளை உள்ளடக்கி, 'பல்லினத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் ஆற்றலை வெளிக்கொணரல் வணிகங்களின் வெற்றி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் பல்லினத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றின் அவசியம்' எனும் தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 9 மாகாணங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 41 வணிகங்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் பிரதிகள் நிதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரெனோ ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரெனோ, 'அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாமனைவரும் முக்கிய பங்காற்றவேண்டும். குறிப்பாக அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், சமூகநீதியை மேம்படுத்தக்கூடியவாறான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரச கட்டமைப்புக்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM