இனத்தை கட்டியெழுப்ப தேசமாக செயற்படுவோம்! : ரெலோவின் மாநாட்டில் பிரகடனம்

24 Mar, 2024 | 03:51 PM
image

எமது இனத்தை கட்டி எழுப்பும் பணியில் ஒரு தேசமாக முழு முயற்சியோடு ஈடுபடுவது என்று இந்த மாநாட்டினூடாக பிரகடனப்படுத்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்றது. 

இதன்போது இயக்கத்தின் மாநாட்டுப் பிரகடனத்தை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எமது மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளான வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், தம்மைத் தாமே ஆளுகின்ற, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய, சுயாட்சி அரசியல் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். 

இந்த இலக்கை அடைவதற்கான நிரந்தர பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அந்தப் பொறிமுறையை இந்தியாவின் மேற்பார்வையிலும் சர்வதேச நாடுகளின் பங்களிப்போடும் ஐ.நா.வின் வழிநடத்தலோடும் புலம்பெயர் உறவுகளின் ஒருங்கிணைப்போடும் உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். 

அத்துடன் எமது தாயக பிரதேசத்தை எமது பாரம்பரிய வதிவிடமாகவும், எமது தனித்துவமான இன அடையாளத்தையும், தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்திய இந்திய / இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களோடு உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த அரசுக்கு தொடர்  அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும். 

எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட மனித உரிமை  மீறல்கள், யுத்த குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட நீதி கோரி நிற்கும் எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நீதிப் பொறிமுறைக்காக தொடர்ந்தும் பாடுபடுவோம். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை கோரி நிற்கும் எம் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். 

அரச இயந்திரங்களினால் எமது தாயக பிரதேசத்தில் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வந்த காணிகளை விடுவிப்பதற்கும், தொடர்ச்சியாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பின் விளைவாக எமது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதாலும், பௌத்த சின்னங்களை நிறுவுவதன் ஊடாகவும் நமது மக்களின் வாழ்வாதாரத்தையும் இனக்குடிப் பரம்பலையும் சிதைத்து நமது சுயநிர்ணய உரிமைக்கான தகுதியை கேள்விக்குறியாக்க முயலும் செயற்பாடுகளுக்கு எதிரான சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நமது இனக் குடிப்பரம்பலின் செறிவைப் பேண எமது எதிர்கால சந்ததிக்கான வளமான வாழ்வை உறுதிப்படுத்தி, அதனூடாக எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க, எமது தாயக பூமியில் பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்யும் தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி அதை செயற்படுத்த உரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

எமது இனத்தின் கல்வி, கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதோடு அவற்றை வளர்ப்பதற்கும் செழுமைப்படுத்தவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் நமது மக்கள் நலன் சார்ந்து பிராந்திய அரசியல் உறவை வலுப்படுத்தவும், சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டவும் அதற்கான பூகோள அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும். 

மேற்கூறிய எமது மக்களின் நலன் சார்ந்த அரசியல் அபிலாசைகளையும் உரிமையையும் வென்றெடுப்பதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உட்பட எமது தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கு சேர்த்து ஒரு தேசமாக எமது இனத்தை கட்டியெழுப்பும் பணியில் முழு முயற்சியோடு ஈடுபடுவது என்றும் இந்த மாநாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பிரகடனப்படுத்தி நிற்கிறது என்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27