இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இடையில் மீண்டும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் (16ஆம் திகதி) ஆட்டத்தில் இறுதியாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வீரரான சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் அணி வீரரான ஷகிப் அல் ஹசனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாளான நேற்றைய(18) ஆட்டத்தின் போதும் சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் பந்தை எதிர்கொண்ட சுரங்க லக்மால் ஆடுகளத்தில் ஓடியதால் ஷகிப் அல் ஹசன் லக்மாலை திட்டினார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட நடுவர்கள் தலையிட்டு நிறுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரண்டாம் இன்னிங்ஸில் 91.3 ஓவரை, லக்மால் எதிர்கொண்ட போது இரு அணி வீரர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நடுவர்களை தலையிட்டு அதனை நிறுத்தியுள்ளனர்.