எம்மில் சிலருக்கு வாழ்க்கை இன்பமாகவும், சிலருக்கு துன்பமாகவும் அமையும். உடனே இது விதி என்று நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ளாதீர்கள்.
இந்த பிறவியில் நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களின் அல்லது பாவ கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால்... உங்களை கர்மா தோஷம், பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் ஆகியவை ஏற்படும் .
இவை உங்களுடைய வாழ்வில் மற்றவர்களிடத்தில் விவரிக்க இயலாத அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. உதாரணத்திற்கு நீங்கள் உங்களது வீடுகளில் எறும்புகளை கொன்றால்.. அதாவது எறும்புகளை கொல்வதற்கான சந்தையில் விற்பனையாகும் விட பொருட்களை வாங்கி வீட்டில் பயன்படுத்தி எறும்புகளை வரவிடாமல் தடுத்தால்... அதுவும் பாவம் தான். இதனாலும் நீங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாக கூடும் என எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம், கர்மா தோஷம் இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில குறிப்புகளை முன்னோர்கள் உதாரணமாக குறிப்பிடுகிறார்கள். அதாவது உங்களது வீட்டில் ஏதேனும் குழந்தை ஜனிக்கும் போது அல்லது ஜனனமாகி ஏழு மாதங்களுக்குள் ஏதேனும் துர் மரணம் அல்லது இயற்கை மரணம் ஏற்பட்டால்.. உங்களுக்கு மேற்கண்ட தோஷங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். இவர்களுக்கும் எம்முடைய ஜோதிட நிபுணர்களும், ஆன்மீக முன்னோர்களும் எளிய ஆலய இறை வழிபாட்டு பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேவிபட்டினம் என்னும் ஊரில் நவபாசன நவகிரக திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்கு சென்று அங்குள்ள இறை ஊழியம் செய்யும் ஆட்களிடம் முறையான வழிபாடு குறித்து கேட்டறிந்து அதனை மேற்கொள்ள வேண்டும். இங்கு ஓர் இரவு தங்கி நிதானமாகவும், முழுமையாகவும், நேர்த்தியாகவும் பரிகாரங்களை செய்திட வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையில் நான்கு முப்பது மணி முதல் 6:30 மணிக்குள் கடற்கரையில் நீராடி, அவர்கள் எடுத்துரைக்கும் படி நவதானியங்களை வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த ஆலயத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். அதன் பிறகு அங்குள்ளவர்களுக்கு உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவில் அன்னதானம் செய்திட வேண்டும். இவற்றை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு உங்களுடைய பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம், கர்மா தோஷம் ஆகியவை விலகி இந்த ஜென்மத்தில் நீங்கள் அடைய வேண்டிய பலன்களை பெறலாம்.
சிலருக்கு அவர்களுடைய குடும்ப ஜோதிடர் பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் இருக்கிறது என்பதனை உணர்த்திவிட்டு, உங்களது வாரிசை ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு தத்து கொடுங்கள் என சொல்வர். நடைமுறையில் இந்த சடங்கு சம்பிரதாயத்தை பெற்றோர்கள் பத்து நிமிடத்திற்கும் குறைவாகவே இதனை மேற்கொள்கிறார்கள். இது தவறு. நீங்கள் உங்களது வாரிசை குறைந்த பட்சம் அந்த ஆலயத்தில் ஏழு நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான கர்மா முழுமையாக கழிந்து நற்பலன்களை பெறுவீர்.
மேலும் எம்மில் சிலர் இந்த ஆலயத்திற்கு எப்போது செல்லலாம்? என கேட்பர். இதற்கு உங்களது குடும்ப ஜோதிடர் சரியான வழிகாட்டலை வழங்குவர். இருப்பினும் தேவிபட்டினம் ஆலயத்திற்கு வருகை தந்து தோஷம் கழிக்க வேண்டும் என விரும்புபவர்கள் அவர்களுடைய ஏழு வயது, பதினேழு வயது, 32, 42, 49, 58, 60 ஆகிய வயதுகளில் வருகை தந்து தோஷ பரிகாரத்தை மேற்கொள்ளலாம் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM