இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல் திசு பாதிப்பு நோய்க்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

24 Mar, 2024 | 09:02 PM
image

எம்மில் சிலர் அடிக்கடி மூச்சு திணறல் பாதிப்பிற்கு ஆளாவர். மருத்துவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் என குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.இதனைப் புறக்கணித்தால்... நுரையீரலில் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

மேலும் வலது பக்க இதய செயலிழப்போ அல்லது சுவாச பாதை செயலிழப்போ ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பையும், விவரிக்க இயலாத நுரையீரல் நோய்களையும் உண்டாக்ககூடும்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என விளக்கும் மருத்துவர்கள், அரிதாகவே பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தனை பாதிப்பு ஏற்படுவதாகவும் விவரிக்கிறார்கள்.

நுரையீரலில் உள்ள திசுக்கள் சேதமடைவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. சிலருக்கு இப்பகுதியில் உள்ள திசுக்கள் கடினமானாலும் நுரையீரலின் இயங்குத்திறன் பாதிக்கப்பட்டு இத்தகைய ஃபைப்ரோசிஸ் உருவாகிறது. நாளடைவில் இத்தகைய பாதிப்பு மோசமான விளைவை ஏற்படுத்தி விடக்கூடும்.

மூச்சுத் திணறல், வறட்டு இருமல், அதீத சோர்வு, திடீர் எடை இழப்பு, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி, கை விரல்கள் மற்றும் கால் விரல்களில் அசௌகரிய உணர்வு, மார்பு பகுதிகளில் வலி போன்றவை அறிகுறியாகும். மேலும் சிலருக்கு அறிகுறியை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்தக்கூடும். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், காற்று மாசு வெளிப்பாட்டின் காரணமாகவும், பரம்பரை மரபணு குறைபாட்டின் காரணமாகவும் சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகளை பொறுத்து மருத்துவர்கள் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எக்கோ கார்டியோகிராம், நுரையீரல் இயங்கு திறனுக்கான பிரத்யேக பரிசோதனை, திசு பரிசோதனை, ரத்த பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.

பாதிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த நுரையீரல் திசுக்களை மீண்டும் முழுமையாக சீரமைக்க இயலாது. இருப்பினும் பாதிப்பு மேலும் ஏற்படாமல் இருப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதன்போது நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் முதன்மையான நிவாரண சிகிச்சையாக வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஓக்ஸிஜன் தெரபி, நுரையீரல் மீட்டுருவாக்க பயிற்சி போன்றவை நிவாரண சிகிச்சையாக வழங்கப்படுகிறது. வெகு சிலருக்கு மட்டுமே பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் கோபால் சுவாமி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிட்டோனிட்டிஸ் எனும் அடிவயிற்று வீக்க பாதிப்பிற்குரிய...

2024-04-22 22:48:20
news-image

கிரானிக் ஹைவ்ஸ் எனும் நாட்பட்ட தோல்...

2024-04-21 07:24:48
news-image

கண் பாதிப்புகளுக்கான நவீன சிகிச்சை

2024-04-20 16:47:13
news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01