(நெவில் அன்தனி)
முல்லன்பூர், மகாராஜா யாதவேந்த்ரா சிங் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) நடைபெற்ற ஐபிஎல் 17ஆவது அத்தியாயத்தின் 2ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களும் 5ஆவது விக்கெட்டில் அவர்கள் பகிர்ந்த 67 ஓட்டங்களும் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிபெறுவதற்கு பெரிதும் உதவின.
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஷிக்கர் தவான் (22), ஜொனி பெயாஸ்டோவ் (9) ஆகிய இருவரும் 19 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் அவர்கள் இருவரும் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து ப்ரப்சிம்ரன் சிங், சாம் கரன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ப்ரப்சிம்ரன் 26 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் ஷர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (100 - 4 விக்.)
இந் நிலையில் சாம் கரனுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினார்.
47 பந்துகளை எதிர்கொண்ட சாம் கரன் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார். இவ்வருட ஐபிஎல் போட்டியில் பெறப்பட்ட முதலாவது அரைச் சதம் இதுவாகும்.
சாம் கரன், ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 19ஆவது ஓவரின் 3ஆம், 4ஆம் பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
எனினும் லியாம் லிவிங்ஸ்டோனும் ஹாப்ரீத் சிங்கும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
லியாம் லிவிங்ஸ்டோன் 21 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
டெல்ஹி சார்பாக 5 துடுப்பாட்ட வீரர்கள் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றபோதிலும் வலுவான இணைப்பாட்டங்கள் பகிரப்படாதது அவ்வணிக்கு பாதகமாக அமைந்தது.
ஆரம்ப விக்கெட்டில் மிச்செல் மாஷ் (20), டேவிட் வோனர் (29) ஆகிய இருவரும் பகிர்ந்த 39 ஓட்டங்களே டெல்ஹி இன்னிங்ஸில் அதிகப்பட்ச இணைப்பாட்டமாக இருந்தது.
ஷாய் ஹோப் (33), அக்சார் பட்டேல் (21), பின்வரிசையில் அபிஷேக் பொரெல் (32 ஆ.இ.) ஆகியோரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஏனையவர்களாவர்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷால் பட்டேல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சாம் கரன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM