பிரதமரை சந்தித்தார் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்!

23 Mar, 2024 | 10:17 PM
image

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (23) அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர். 

அதேபோன்று டட்டுக் சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள்   மலேசியாவில் பணிப்புறிவதற்கான  10ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார். அதற்காக பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார். 

தற்போது இவ் ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1853 இளைஞர், யுவதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து, இலங்கையை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சிறந்த நிர்வாகத்திரன் ஊடாக மிக விரைவாக இலங்கையை மீட்டெடுத்தனர். ஏனைய  நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அனுகுமுறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தது. அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் மலேசிய அரசாங்கம் உதவுவதற்கு  காத்திருப்பதாகவும் டட்டுக் சரவணன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59