இந்திய தேர்தல் அறிவிப்பால் தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை

23 Mar, 2024 | 10:44 PM
image

(ஆர்.ராம்)

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொதுத்தேர்தல் அறிவிப்பால் தாமதமடைந்துள்ளது. 

இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுவதோடு, அவர்களது உபகரணங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்றும் நாட்டின் கடல்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் பல இடம்பெற்று வந்தன. அதேநேரம், தமிழகத்திலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில், இருநாட்டு கடற்றொழிலார்கள் விவகாரத்திற்கு விரைந்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாண்டிச்சேரி ஜுனியன் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் மீனவர் நலன் கே.லக்ஷ்மி நாராயணன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிததத்தின் பிரகாரம், தமிழக முதல்வர் ,மு..க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் டக்ளஸ{க்கும் இடையில் சந்திப்பொன்றை நடத்துவதென்றும் அதில் இருதரப்பும் இணக்கப்பாடுகளை எட்டுவதென்றும் கூறப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் பாண்டிச்சேரி செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையி இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்ட இந்த விவகாரத்துடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரையும் சந்திப்பதாக இருந்தால் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தின் முன் அனுமதி பெற வேண்டியது அந்நாட்டுச் சட்டமாகவுள்ளது.

அந்தவகையில், இருதரப்பு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தாமதமாகியுள்ளது. அத்துடன், விசேடமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டமாட்டார்கள் என்ற உத்தரவாதக் கடிதத்தினை பாண்டிச்சேரி மற்றும் தமிழக முதலமைச்சர்கள் வழங்குவதற்கு உறுதிய அளித்துள்ளன. 

இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளதோடு ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23
news-image

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை...

2026-03-06 18:37:25