பல்கேரிய நாட்டு போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் செல்ல முயன்ற 41 வயதுடைய ஈரானியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (22) இரவு கட்டாரிலிருந்து வருகை தந்த ஈரானியர் ஜப்பான் நாட்டிற்கு புறப்படும் விமானத்தில் ஏறுவதற்காக அவரது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.
அவருடைய ஆவணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் , அவரது பயணப்பொதிகளை சோதனையிட்ட போது போலியான கடவுச்சீட்டுகளும் போலி முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன..
பின்னர், இந்த ஈரானிய பிரஜையை கைது செய்த குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அவரை நாடு கடத்துவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த கட்டார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM