எம்மில் பலரும் பல தருணங்களில் சிறிய விபத்தினை சந்திக்கிறோம். அதன் போது எதிர்பாராமல் அடிப்பட்ட இடங்களில் இருந்து குருதி கசியும் அல்லது வெளியாகும். இந்நிலையில் அங்கிருந்து வெளியாகும் குருதியானது 5 முதல் 10 நிமிடங்களுக்குள் உறைந்திடவேண்டும். அப்படி உறையாமல் இருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இது குறித்து அண்மைய ஆய்வுகளின் படி, உலகளவில் 10,000 பேர்களில் ஒருவர் இத்தகைய பாதிப்பு இருக்கிறது என்றும், இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது என்றும், அதிலும் மரபணு குறைபாடுகளால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரத்தம் கசியும் இடத்தைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். ஒரு சிலருக்கு பற்களின் ஈறுகளிலிருநது தானாகவே இரத்தகசியும். வேறு சிலருக்கு மூட்டுகள் மற்றும் தசைகளில் இத்தகைய இரத்தக்கசிவு ஏற்பட்டு, வலி அல்லது வீக்கம் ஏற்பட்டு பாதிப்பை அதிகரிக்கச் செய்யும். மிகச் சிலருக்கு மூளை மற்றும் வயிறு பகுதிகளில் இரத்த கசிவு ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடும்.

இந்த பாதிப்பை கண்டறிந்து அதன் தன்மைக்கு ஏற்ப ஊசிகள் மூலம் இதனை குணப்படுத்தலாம். பொதுவாக இத்தகைய பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உடற்பயிற்சிகள் மூலம் தசைகளை வலுவூட்டிக்கொள்ளவேண்டும்.இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் வீக்கம் இருக்கும் இடத்தில் வெந்நீரால் ஒத்தடம் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்போது இத்தகைய குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலேயே கண்டறியலாம்.

டொக்டர் வரதராசன்

தொகுப்பு அனுஷா.