சர்வதேச தரவரிசையில் முன்னேறுவதற்கான இலங்கையின் முதல் முயற்சி பலிக்கவில்லை!

23 Mar, 2024 | 01:41 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை (22) இரவு நடைபெற்ற பப்புவா நியூ கினிக்கு எதிரான 'பீபா சீரிஸ் 2024' கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை வெற்றிபெறத் தவறியதால் சர்வதேச தரவரிசையில் முன்னேறும் அதன் முயற்சி பலிக்காமல் போயிற்று.

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தால் சர்வதேச தரவரிசைக்கான 5க்கும் மேற்பட்ட புள்ளிகள் கிடைத்திருக்கும்.

ஆனால், கோல் போடுவதற்கு இலங்கைக்கு கிடைத்த 3 வாய்ப்புகள் தவறவிடப்பட்டதால் தரவரிசையில் முன்னேறுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

மாலையில் பெய்த கடும் மழை உஷ்ணத்தை சற்று தணித்ததால் இலங்கை, பப்புவா நியூ கினி ஆகிய அணிகளின் வீரர்களிடம் ஆக்ரோஷம் இருப்பதை போட்டியில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பப்புவா நியூ கினியை வெற்றிகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெளிநாடுகளில் விளையாடிவரும் இலங்கை வம்சாவளி வீரர்களில் 8 பேரை முதல் பதினொருவர் அணியில் தலைமைப் பயிற்றுநர் அண்டி மொறிசன் இணைத்துகொண்டிருந்தார்.

டிலொன் டி சில்வா, வசீம் ராஸிக், ஆதவன் ராஜ்மோகன், குளோடியோ கமேர்க் நிச், ஜேசன் தயாபரன், ஜெக் ஹிங்கேர்ட், சகாயராஜி ஸ்டீவன், லியோன் பெரேரா ஆகியோர் முதல் பதினொருவரில் இடம்பெற்ற இலங்கை வம்சாவளியினராவர்.

உள்நாட்டவர்களில் அணித் தலைவர் சுஜான் பெரேரா, ஜூட் சுபன், ஹர்ஷா பெர்னாண்டோ ஆகியோர் முதல் பதினொருவரில் இடம்பெற்றனர்.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்காததுடன் கிடைக்கப்பெற்ற ஓரிரு வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்த தவறினர்.

டிலொன் டி சில்வா, வசீம் ராசிக் ஆகியோர் கோல் போடுவதற்கு எடுத்த சில முயற்சிகள் இலக்கு தவறிப்போயின.

ஆதவன் ராஜ்மோகனின் ப்றீ கிக் பந்து கோல் காப்புக்கு மேலாக பறந்தது.

ஹர்ஷ பெர்னாண்டோ நீண்ட 'த்ரோன் இன்'களை பரிமாறியபோதிலும் அவற்றை இலங்கை வீரர்கள் முறையாக பயன்படுத்தத் தவறினர்.

இடைவேளையின் பின்னரும் இதே நிலையைத்தான் அவதானிக்க முடிந்தது.

டிலொன் டி சில்வா இடதுபுறத்தால் பல சந்தர்ப்பங்களில் பந்தை நகர்த்திச் சென்ற விதம் சிறப்பாக இருந்தது. ஆனால், எதிரணியின் இரண்டு வீரர்கள் அவரை சூழ்ந்துகொண்டதால் அவரது நகர்வுகளுக்கு தடை ஏற்பட்டது.

அவர் தாழ்வாக பரிமாறிய பந்தை இரண்டு தடவைகள் கோலினுள் புகுத்த வசீம் ராஸிக் தவறினார். மற்றொரு சந்தர்ப்பத்தில் வசீம் ராஸிக் பரிமாறிய பந்தை கோலினுள் புகுத்த இலங்கை வீரர்கள் தவறினர்.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் சுமன் பரிமாறிய பந்தும் வீண் போனதுடன் அவர் 18 யார் எல்லைக் கோட்டில் இருந்து உதைத்த பந்து கோல் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக சென்றது.

இறுதியில் கோல் எதுவும் இன்றி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டதில் இலங்கை திருப்தி அடைந்தது.

மேலும் இப்போட்டியில் மாற்று வீரர்களை களம் இறக்கியதில் மொறிசன் தாமதப் போக்கை கையாண்டதும் அணிக்கு சாதமாக அமையவில்லை.

ராஜ்மோகன் உபாதைக்குள்ளானதாலேயே கடைசி நேரத்தில் ஆக்கிபுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு குறைந்தது 20 நிமிடங்கள் விளையாட வாய்ப்பு கிடைத்திருந்தால் இலங்கை அணிக்கு பலன் கிடைத்திருக்கும் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.

பூட்டானுக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது இவ்வாறிருக்க, இப்போட்டிக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற முதலாவது போட்டியில் பூட்டான் அணியை 6 - 0 என்ற கோல்கள் கணக்கில் மத்திய ஆபிரிக்க குடியரசு அணி வெற்றிகொண்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41