நடிகர் அஜித் விரைவில் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­திக்கப் போவ­தா­கவும், இந்த சந்­திப்­பிற்குப் பின்னர் அவர் அர­சி­யலில் களமிறங்கப் போவ­தா­கவும் செய்­திகள் வெளி­யாகி இருக்­கின்­றன.

தமிழ்­நாட்டில் தனக்­கென்று ஒரு மிகப்­பெ­ரிய ரசிகர் பட்­டா­ளத்தை வைத்­தி­ருப்­பவர் அஜித். தற்­போ­தைய சூழ்­நி­லையில் தான் நடிக்கும் படங்கள் தொடர்­பான விழாக்­களில் கூட அஜித் கலந்து கொள்­வ­தில்லை. ஆனால், பிர­தமர் நரேந்­திர மோடியை அஜித் விரைவில் சந்­திக்க இருப்­ப­தா­கவும், இந்த சந்­திப்­பிற்குப் பின்னர் அர­சி­யலில் அவர் ஈடு­படப் போவ­தா­கவும் தக­வல்கள் வெளி­யாகி இருக்­கின்­றன. தமிழ்­நாட்டில் பா.ஜ.க. கட்­சியை வலுப்­ப­டுத்த நடிகர் ரஜி­னியை பல­முறை சந்­தித்தும் அவர் பிடி­கொ­டுக்­க­வில்லை என்­பதால் கட்சி தரப்பில் அஜித்தை கள­மி­றக்க முடிவு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் இது தொடர்­பாக பா.ஜ.க. மற்றும் அஜித் தரப்பில் இருந்து இது­வரை எந்த ஒரு அதி­கா­ர­பூர்வ அறி­விப்பும் வெளி­யா­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆனால் ரசிகர் மன்­றங்­க­ளையே அஜித் துணிந்து கலைத்­தவர் என்­பதால் மோடி­யு­ட­னான சந்­திப்பு நிகழ்ந்தால் எவ்வாறான முடிவை எடுப்பார் என்று அறிய அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.