முன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படத்திற்கு உளவாளி என்று பெயர் சூட்டவிருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக நடிக்கும் படமொன்றை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார். இதற்கு இதுவரை மர்மம், சம்பவாமி யுகே யுகே, ஏஜெண்ட் வினோத் என பல பெயர்களை டைட்டிலாக யோசித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு வியட்நாமில் தொடங்கவிருக்கிறது. அதற்குள் படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிடவிருக்கிறார்கள். எவ்வளவோ பெயர்களை பரிசிலீத்தும் எதிலும் திருப்தியடையாத படக்குழுவினர் இறுதியாக தெலுங்கிற்கு ஸ்பைடர் என்றும், தமிழுக்கு உளவாளி என்று பெயர் சூட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.

ஜுன் மாதம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு இப்போது தான் டைட்டில் வைத்திருக்கிறார்கள்.