அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்

22 Mar, 2024 | 05:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை  ஹஷான்)

சித்திரை புத்தாண்டை இலக்காகக் கொண்டு ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  20 கிலோகிராம் அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 85  மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22)  இடம்பெற்ற நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, 

விவசாயத்துறையில் கொள்கை ரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதால் தோற்றம் பெற்ற நெருக்கடியை அனைவரும் நன்கு அறிவோம்.இதனை விவாதிக்க போவதில்லை.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் விவசாயத்துறை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தாவிட்டால்  எதிர்காலத்திலும் விவசாயத்துறை பாரிய  எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ளும். விவசாயத்துறையை  நவீனமயப்படுத்த உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.விவசாயத்துறை மேம்பாடு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

2022 ஆம் ஆண்டு அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக மட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். நெல் கொள்வனவுக்கு விவசாயத்துறை அமைச்சு மானியம் கோரியுள்ளது. உரிய நேரத்தில் நததி ஒதுக்கப்படும்.பெரும்போக விவசாயத்தில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

சித்திரை புத்தாண்டை இலக்காகக் கொண்டு ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  20 கிலோகிராம் அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக மாவட்ட மட்டத்தில் 85  மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு 27 .4 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது.இந்த முறையும்  சுமார் 27 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டம் கட்டமாக முன்னேற்றமடையும் போது அதன் பயன் நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.ஆகவே இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது . புத்தாண்டு காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41