இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு ஒன்றினை மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது.
சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாடு ஆராய்கின்றது.
இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
முதலாவதாக நடைபெறும் “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படுகின்றது.
அத்துடன் “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான இரண்டாவது குழு நிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சி குறித்த நோக்கினையும், சிறந்த அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு துறைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய, இலங்கை நிபுணர்கள் இந்த இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கின்றனர்.
அத்துடன் இந்த மாநாட்டினை https://youtube.com/live/0mfxUibO3-g?feature=share என்ற முகவரியில் மார்ச் 26 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் நேரலையாக பார்வையிடமுடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM