இலங்கையின் பொருளாதார மீட்சி, முதலீட்டு வாய்ப்பு குறித்து லண்டனில் விளக்கமளித்தார் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம!

22 Mar, 2024 | 08:40 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் பொதுநலவாய முயற்சியாண்மை மற்றும் முதலீட்டுப் பேரவையின் வட்டமேசை கலந்துரையாடலில் பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம விளக்கமளித்துள்ளார்.

'பொதுநலவாய நாடுகள் - இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்தல்' எனும் தலைப்பில் கடந்த புதன்கிழமை லண்டனில் உள்ள பணிப்பாளர்கள் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலில் பொதுநலவாய முயற்சியாண்மை மற்றும் முதலீட்டுப் பேரவையின் அழைப்பின்கீழ் பங்கேற்றிருந்த பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம இலங்கையின் முதலீட்டு இயலுமை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

பொதுநலவாய முயற்சியாண்மை மற்றும் முதலீட்டுப் பேரவை தலைவரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு ஆகியவற்றின் நீட்சியாகவே லண்டனில் இந்த வட்டமேசை கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியானது நாட்டின் மீண்டெழும் தன்மையையும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் நாடுகள் உள்ளிட்ட இருதரப்பு கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முனைப்பையும் காண்பிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வரிச்சலுகைகள், சட்டக்கட்டமைப்பு, சட்டத்தின் ஆட்சி, முதலீட்டை இலகுபடுத்துவதற்கு இலங்கை முதலீட்டுச்சபை போன்ற கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரநிலைய முக்கியத்துவம் என்பன உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அதேபோன்று இலங்கையில் சுற்றுலா, உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளிலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றியும் ரோஹித போகொல்லாகம எடுத்துரைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17