காஸா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் பிரேரணை மீது பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு

Published By: Sethu

22 Mar, 2024 | 02:39 PM
image

காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதை வலியுறுத்துவதற்காக அமெரிக்க அனுசரணையுடன் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகளை  அமெரிக்கா ஏற்கெனவே 3 தடவைகள் தனது வீட்டோ அதிகாரரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.

இந்நிலையில் தற்போது காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க அனுசரணையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போர் நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இன்று எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் போர் நிறுத்தம் குறித்து பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26