(துரைநாயகம் சஞ்சீவன்)
கடலுடன் கலக்கும் ஆற்று நீரை மறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரு போகமும் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திரியாய் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் மூடைகளை 15 அடி உயரத்துக்கு அடுக்கி, ஆற்று நீரை மடைமாற்றி சேமித்து, அதன் மூலம் 300 தொடக்கம் 350 ஏக்கரில் சிறுபோக நெற்பயிர்களை செய்கையிட திட்டமிட்டுள்ளனர்.
திரியாய் நீலபனிக்கன் விவசாய சம்மேளனத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீர் வசதியின்றி, தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. இவற்றுக்கான நீர் வசதி வழங்கப்படும் பட்சத்தில் அனைத்து நிலங்களிலும் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும் எனவும், கடந்த வருடம் இந்த ஆற்று நீரை மறித்து, சேமித்து 150 ஏக்கரில் விவசாயம் செய்ததாகவும் இந்த வருடம் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறுபோக விவசாயம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் அணைக்கட்டை அமைத்து விவசாயம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருபோகமும் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM