தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்கிறோம் ; மத்திய வங்கி அரசாங்க நிதிக் குழுவுக்கு அறிவிப்பு

22 Mar, 2024 | 12:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெரிவுக்குழு முன்வைத்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும்,சம்பள அதிகரிப்பு செயற்படுத்தலை பிற்போடுவதாகவும் மத்திய வங்கி அரசாங்க நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் சேவையாளர்களின்  சம்பள அதிகரிப்புக்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர்கள் உட்பட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் அண்மையில் கட்சித் தலைவர் கூட்டத்துக்கும்,அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கும் முன்னிலையாகியிருந்தனர்.

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கடந்த செவ்வாய்க்கிழமை (19) பாராளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தார்.

அரசாங்க  நிதி பற்றிய குழு மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு இடையேயான  கடிதப் பறிமாற்றத்தின் அடிப்படையில்,மத்திய வங்கியின் சுயாதீனத்துக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வானது மார்ச் மாதம் 16 ஆம் திகதி கையளிக்கப்பட்ட கடிதத்தின் விசேட குறிப்புடன்  ' இலங்கை மத்திய வங்கி  - சம்பளத் திருத்தம்  2024-2026 ' எனும் தலைப்பில்,அரசாங்க நிதி பற்றிய குழு தற்காலிக சுயாதீனமான,ஊதியக் குழுவை  நிறுவுவதற்கு பரிந்துரைத்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநரின் இணக்கப்பாட்டுடன்  நிதி அமைச்சர் சர்ச்சைக்குரிய சம்பள அதிகரிப்பு குறித்து  முழுமையான பரிசீலனைகளை மேற்கொண்டு நான்கு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய  தீர்வு வரும் வரை சம்பள அதிகரிப்பு செயற்படுத்தலை ஒத்திவைக்க  மத்திய வங்கிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

சம்பள குழுவின் உறுப்பினர்கள் இலங்கை மத்திய வங்கியின் தொடர்புடைய துறைகளில் இருந்தும்,மத்திய வங்கிக்கு வெளியில் இருந்தும் அதாவது தேவையானவாறு  அரச சேவைகளில் இருந்தும் அதற்கு வெளியே இருந்தும் நியமிக்கப்படுவார்கள்.

சிறப்பு பணியாளர்களின் நிபுணத்துவம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்புடைய வகையிலான ஒப்பீடு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அனைத்து  ஊழியர்  பிரிவுகளுக்கும் ஊதியத்தில் நியாயமான மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்க நிதி தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பற்றிய தெரிவுக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை முழுமையாக ஏற்பதாகவும்,சம்பள அதிகரிப்பு செயற்படுத்தலை ஒத்திவைப்பதாகவும் மத்திய வங்கி அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:31:00
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12
news-image

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில்...

2024-07-19 19:58:48
news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2024-07-19 19:57:08
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 17:28:46
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29