கூலி வேலைக்காக இரண்டு முச்சக்கர வண்டியில் சென்றப்பெண்கள் மீது அதிவேக நெடுஞ்சாலையினுடாக வந்த லொறி மோதியதால் சம்பவ இடத்திலேயே 11 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் மலக்கால்மோர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பெண் கூலி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு முச்சக்கர வண்டிகள் சென்றுள்ளன.

அச்சமயம் கொள்கலனுடன் வந்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த முச்சக்கர வண்டிகள் மீது குடைசாய்ந்ததால், இரண்டு முச்சக்கர வண்டிகளும் நசுங்கியுள்ளதோடு, அதில் பயணம் செய்த 11பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

மேலும் குறித்த சம்பவத்தால், அப் பகுதிமுழுவதும் சோகம் நிலவுவதாகவும், படுகாயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.