சீபா ஒப்­பந்­தத்தை வேறு பெயரில் கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இந்­திய பாரா­ளு­மன்­றத்தில் இரு நாடு­க­ளுக்கு இடையில் பாலம் அமைத்தல் மற்றும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வர்த்­தக நட­வ­டிக்­கைகள் தொடர்பில் உறு­தி­பட கூறு­கின்ற நிலையில் அர­சாங்கம் உண்­மை­களை மூடி மறைப்­ப­தாக முன்னாள் வெளிவி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க் குற்­றங்கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­ட­னான நீதிமன்­றத்தை ஸ்தாபித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பு என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜீ.எல்.பீரிஸ் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தேர்தல் காலங்­களில் அர­சாங்கம் பல்­வேறு உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இரத்து செய்­வ­தாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அர­சாங்கம் இன்று அதனை 5 வரு­டத்­திற்கு தக்க வைத்துக் கொண்­டுள்­ளது. தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்டு வரு­வதாக கூறி­யது. அத­னையும் இழுத்­த­டிக்­கின்­றது.

அர­சாங்கம் உண்­மை­களை மூடி மறைக்­கின்­றது. இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இடையில் பாலம் அமைக்­கப்­பட உள்­ள­தா­கவும் அதற்­காக ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியில் கடனை எதிர் பார்த்­துள்­ள­தா­கவும் இந்­திய பாரா­ளு­மன்­றத்தில் அந்­நாட்டு போக்­கு­வ­ரத்து அமைச்சர் உறு­தி­பட கூறினார். ஆனால் எமது அர­சாங்கம் அது குறித்து எவ்­வி­த­மான கருத்தும் கூறாது தொடர்ந்தும் மௌனம் சாதிக்­கின்­றது.

அதேபோன்று தான் தேர்தல் காலப்­ப­கு­தியில் தற்­போ­தைய அர­சாங்கம் தமிழ் தேசியக்கூட்­ட­மைப்பு உட்­பட மேற்­கு­லக நாடு­க­ளுக்கு பல்­வேறு உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யது. அந்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­மாறு சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் தற்­போது அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன.

இதேவேளை நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்ற பல்­வேறு உறு­தி­மொ­ழி­களை அர­சாங்கம் ஜெனீ­வாவில் வழங்­கி­யது. குறிப்­பாக இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர் குற்­றங்­களை விசாரணை செய்வதற்காக சர்வதேச நீதித்துறையினரை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தது. இவ்வாறு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள்ாகியுள்ளது என தெரிவித்தார்.