பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ரொபின்ஹோ, பாலியல் வல்லுறவு வழக்கில் விதிக்கப்பட்ட 9 வருட தண்டனையை அனுபவிப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான ரொபின்ஹோ, பிரேஸில் அணிக்காக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்.
2013 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் அணிக்காக விளையாடிய காலத்தில், மிலான் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் அல்பேனிய பெண்ணொருவரை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ரொபின்ஹோ குற்றவாளி என 2 வருடங்களுக்கு முன்னர் இத்தாலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரேஸிலிருந்து அவரை இத்தாலிக்கு நாடு கடத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.
அதையடுத்து பிரேஸிலிலில் அவர் தண்டனையை அனுபவிக்க வழிசெய்யுமாறு பிரேஸிலிடம் இத்தாலிய அரசாங்கம் கோரியது.
ரொபின்ஹோவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து பிரேஸில் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.
அதன்பின் தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக ரொபின்ஹோ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்தது.
அதன்பின் பிரேஸிலின் சான்டோஸ் நகரிலுள்ள ரொபின்ஹோவின் வீட்டில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM