புத்தளம் சின்னப்படு கடற்பரப்பில் நேற்று சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 17 இலங்கை மீனவர்களை, கடற்படையினர் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

மேலும் சின்னப்படு பகுதியில் 5 படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்டவர்களிடையே, முறையான சட்ட அனுமதிப்பத்திரம் எதுவும் இருக்கவில்லை என இலங்கை கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 9 மீன்பிடி வலைகள், 11 டிஞ்சிஸ்கள் மற்றும் 5 படகுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் மீன்வளத்துறை உப பணிப்பாளரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளமை குறிப்பிடதடகக்கது.