சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் திருவிழா தருணத்தில் உலகம் முழுவதும் பட மாளிகையில் 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் கடந்த பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியானது.
ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி 40 நாட்களைக் கடந்த பிறகும்... தொடர்ந்து முதலிடத்தில் நீடித்திருப்பதுடன் பல நாடுகளிலும், பல மொழிகளிலும் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.
குறிப்பாக இந்தத் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியான பிறகு இந்தியா மட்டுமில்லாமல் தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் முன்னணி இடத்தை பிடித்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மார்ச் மாதம் எட்டாம் திகதியன்று இந்தி மொழியில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யாத புதிய சாதனையை 'கேப்டன் மில்லர்' சாதித்திருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
வரலாற்றுப் பின்னணியில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடப்பதாக புனையப்பட்டிருக்கும் இந்த கதையில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படமாளிகையில் வெளியாகி குறுகிய காலகட்டத்தில் டிஜிட்டல் தளத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதற்கு படமாளிகை அதிபர்களும், ரசிகர்களும் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவிக்கும் இந்த தருணத்தில்... தனுஷின் 'கேப்டன் மில்லர்' டிஜிட்டல் தளத்திலும் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டவிருப்பதால் அவருடைய ரசிகர்களும், படக் குழுவினரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM