''சிறப்பான நடிப்பை வழங்க வேண்டும் என்ற சிக்கலான சூழலில் என்னுடைய எயர் போன்கள் மூலம் இசைஞானியின் இசையில் பாடல்களை கேட்டு அதில் மூழ்கி விடுவேன்.
அதன் மூலமாகவே எனது நடிப்பை வெளிப்படுத்துவேன். இன்றுவரை எனக்கு நடிப்பை சொல்லித் தருவது இசைஞானியின் இசை தான்'' என நடிகர் தனுஷ், இளையராஜாவின் சுயசரிதையை தழுவி தயாராகும் 'இளையராஜா' எனும் படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'இளையராஜா' எனும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். இந்திய மாநிலங்களவை உறுப்பினரும், பத்ம விபூஷண் விருதினை வென்றவரும், திரையிசைத்துறையில் சாதனை படைத்தவருமான 'இசை ஞானி' இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரோடக்ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஸ்ரீராம் பக்தி சரண், சி. கே. பத்மகுமார், வருண் மாத்தூர், இளம் பரிதி கஜேந்திரன், சவுரப் மிஸ்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதன் போது 'உலக நாயகன்' கமல்ஹாசன் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
உலக நாயகன் கமல்ஹாசன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு மகத்தான பொறுப்பும் இருக்கிறது. அழுத்தமும் இருக்கிறது. இதனால் இதனை உணர்ந்து அவர் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இசைஞானி இளையராஜாவை பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை அவர் ஆய்வு செய்து, ரசித்து, அதனை ரசிகர்களிடம் தரவேண்டும் என பரிந்துரைக்கிறேன். இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றை எட்டு பாகமாக கூட உருவாக்கலாம். இசைஞானியின் வரலாற்றை நேர்த்தியாகவும், அழகாகவும் சித்தரிக்க நடிகர் தனுசுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
நடிகர் தனுஷ் பேசுகையில், '' நம் எண்ணங்கள் தான் நம்மை வடிவமைக்கின்றன என்று கூறுவார்கள். அதுதான் உண்மை. நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி பயணித்து அதற்காக நம்மை அர்ப்பணிக்கும் போது அவை நிறைவேறும். வெள்ளித்திரையில் அவரது பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. இப்போது அது சாத்தியமாகி இருக்கிறது. இதனால் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னுடைய திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இளையராஜாவின் இசை தான் என்னை வழிநடத்திச் செல்கிறது. எனக்கு இன்று வரை நடிப்பை சொல்லிக் கொடுப்பதும் அவருடைய இசை தான். அவருடைய வாழ்க்கை வரலாற்றில் இசைஞானி இளையராஜாவாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமிதமாக உணர்கிறேன். இந்தத் திரைப்படத்தை உற்சாகத்தோடு மகிழ்ச்சியோடும் உருவாக்கலாம் என இயக்குநர் அருணை ஊக்குவிக்கின்றேன். '' என்றார்.
இதனிடையே இயக்குநர் விஜயசேகர் என்பவர் இசைஞானி இளையராஜாவை அணுகி, அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கலாம் என்ற எண்ணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதும், இதனைத் தொடர்ந்து அவர் சில ஆண்டுகள் அவருடன் இருந்து இதற்கான திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதும், தற்போது இப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதும், இதன் பின்னணியில் நடைபெற்ற உள்குத்து அரசியல் என்ன என்பது விரைவில் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM