இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் வங்கி கணக்குகளை முடக்கியது அக்கட்சிக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
“இது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது அல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீதான முடக்கம். நாங்கள் விளம்பரம் பதிவு செய்ய முடியவில்லை. எங்களது தலைவர்களை எங்கும் அனுப்ப முடியவில்லை. இது ஜனநாயத்தின் மீதான தாக்குதல். காங்கிரஸ் கட்சியின் மீதான கிரிமினல் நடவடிக்கை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜனநாயகம் என்பது பொய்.
இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய். இது முற்றிலும் பொய். இந்தியாவில் 20% மக்கள் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். தேர்தலில் எங்களை முடக்குவதற்காக இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இன்று எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும், இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் கடன் சேதம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM