திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் குளத்தின் பகுதிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் நேற்று புதன்கிழமை (20) முதல் மீண்டும் ஆக்கிரமித்து வருவதாகவும், கனரக வாகனங்களை பயன்படுத்தி குளத்தின் பகுதிகளை சேதப்படுத்தி அங்கிருக்கும் நீரை வெளியேற்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் அக்குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
அபிராமி அம்மன் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட மேன்காமம் குளத்தை நம்பி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 400 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இக்குளமானது நீண்டகாலமாக புணரமைக்கப்படாமலும், பெரும்பான்மை இனத்தவர்களினால் கையகப்படுத்தப்பட்டும் வருகின்றது. இதனால் இக்குளத்தை நம்பி விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மக்கள் காலாகாலமாக விவசாயத்தில் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு குளத்தினை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு குளத்தை பாதுகாக்க உதவுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM