ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ஆம் திகதி, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு செல்லவுள்ளார். 

மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் ஜனாதிபதி, எதிர்வரும் 24ம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது ரஷ்யா - இலங்கைக்கிடையில் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பொருளாதா துறை சார்ந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. 

அத்தோடு ரஷ்ய விஜயத்தில் மஹிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க மற்றும் எஸ். பி் நாவின்ன உள்ளிட்ட அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.