யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 5 ஆவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி அடையாளம் காட்டினார்

Published By: Digital Desk 3

21 Mar, 2024 | 10:42 AM
image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி  கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். 

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடைபெற்ற வேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதன்போது, படுகொலையான இளைஞனின் மனைவி மன்றில் தோன்றி, ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காட்டினார்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றையதினம் வரையில் ஆறு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-15 06:26:02
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24