இலங்கை கால்பந்தாட்டத்திற்கு பிரகாசமான எதிர்காலம் : உலக தரவரிசையிலும் முன்னேற வாய்ப்பு

21 Mar, 2024 | 10:11 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்டத்துக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகிவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் அறிமுகப்படுத்தியுள்ள பீபா சீரிஸ் 2024 கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை, அத் தொடரில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டி தரவரிசையில் முன்னேறுவதற்கான முதல் படியைக் கடக்கும் என நம்பப்படுகிறது.

கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமையும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள பீபா சீரிஸ் 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் இலங்கை கால்பந்தாட்டம் மேன்மை அடைவதற்கு பெரிதும் உதவும் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இப் போட்டியை முன்னிட்டு உள்நாட்டில் உள்ள அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் 9 பேருடன் வெளிநாடுகளில் விளையாடிவரும் இலங்கை வம்சாவளியினர் 14 பேரை இணைத்துக்கொண்டு இலங்கை அணியை சர்வதேச மட்டத்தில் கட்டியெழுப்ப இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரும் அவரது அணியினரும் இவ்விடயத்தில் எடுத்துள்ள தீர்க்கதரிசனமான முடிவுகள் இலங்கை கால்பந்தாட்டத்தை உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும் என நம்பலாம்.

இந்த விடயத்திலும் இன்னும் சில விடயங்களிலும் தலைவர் ஜஸ்வர் உமர் தன்னிச்சையாக செயற்படுவதாக நிருவாகத்தில் இருக்கும் சிலர் குறை கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

ஏனேனில் குறைகூறுபர்கள் பதவிகளில் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள், எவ்வாறு தன்னிச்சையாக செயல்பட்டார்கள் என்பதை மறந்து விட்டு இத்தகைய குறைகளை முன்வைப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்கத் தோன்றுகிறது.

கடந்த சில வருடங்களாக உள்ளூர் போட்டிகள் நடைபெறாத நிலையில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ள பீபா சீரிஸ் கால்பந்தாட்டத் தொடர் இரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பது உறுதி.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளி வீரர்களை அழைப்பித்து இலங்கை அணியை சர்வதேச மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் செயற்பட்டுவரும் சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கு கால்பந்தாட்டத்தை நேசிக்கும் அனைவரும் கைகொடுத்து உதவவேண்டும் என முன்னாள் தேசிய வீரர்கள் பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பீபா சீரிஸ் கால்பந்தாட்டப் போட்டிக்குப் பின்னர் குறைந்தது நான்கு சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையை விளையாடச் செய்வதற்கு ஜஸ்வர் திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது.

அப் போட்டிகளிலும் இலங்கை வம்சாவளி வீரர்களை இணைத்துக்கொண்டு விளையாடினால் சர்வதேச தரவரிசையில் இலங்கை பெரு முன்னேற்றம் அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

நடைபெறப் போகும் பீபா சீரிஸ் போட்டியில் இலங்கை எதிர்த்தாடவுள்ள பப்புவா நியூ கினி உலக தரவரிசையில் 165 ஆம் இடத்திலும் பூட்டான் 184ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை 204ஆவது இடத்தில் இருக்கிறது.

எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளி வீரர்களின் பிரசன்னத்துடன் இலங்கையை வெற்றிபெறச் செய்வதற்கும் தரிவரிசையில் முன்னேற்றுவதற்கும் தலைமைப் பயிற்றுநர் அண்டி மொறிசன் புத்திசாதுரியத்துடன் செயற்படுவார் என கருதப்படுகிறது.

சுகததாச அரங்கில் இரண்டு தினங்களாக பயிற்சிகளில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி வீரர்களின் ஆற்றல்கள் உயரிய நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்களது உயரம், உடல்வாகு, இரண்டு பாதங்களாலும் விளையாடக்கூடிய திறமை என்பன இலங்கை அணிக்கு சாதகமான முடிவுகளை ஈட்டிக்கொடுக்கும் என்பது நிச்சயம்.

இப் போட்டிகளின் முதலாவது பகுதியில் அதிசிறந்த (இலங்கை வம்சாவளியினரை) பதினொருவரை களம் இறக்கி, கோல்களைப் புகுத்தி இலங்கையை முன்னிலை அடையச் செய்வதே தலைமைப் பயிற்றுநரின் திட்டமாகும். போட்டியின் தன்மை இலங்கைக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடைசிக் கட்டத்தில் உள்ளூர் வீரர்களுக்கு அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளார்.

இது இவ்வாறிருக்க, உள்ளூர் கால்பந்தாட்டக் கட்டமைப்பை ஸ்திரப்படுத்தி முதல்தர கழங்களுக்கு இடையிலான சுப்பர் லீக், சம்பியன்ஸ் லீக் மற்றும் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான 75 வீத ஏற்பாடுகளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பூர்த்திசெய்துள்ளதாக தெரியவருகிறது.

இவை அனைத்தும் இலங்கை கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு சிறந்த நகர்வுகளாக அமையும் என நம்புவோமாக.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26
news-image

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது...

2025-02-02 18:27:38
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக்...

2025-02-02 15:26:25
news-image

19 இன் கீழ் மகளிர் ரி...

2025-01-31 22:03:14
news-image

இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள்...

2025-01-31 21:55:29