கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் 24ஆம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப அம்சமான விளக்கு வைத்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி, பூஜையை தொடர்ந்து பிரம்பு வழங்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி ஆலயத்திலிருந்து மாட்டு வண்டில்களில் பண்டமெடுத்து வருவதற்காக மீசாலை புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பண்டமரவடிக்கு பக்தர்கள் சென்றுள்ளனர்.
இவ்வாறு பண்டமெடுப்பதற்காக சென்ற மாட்டுவண்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பண்டமரவடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் 24ஆம் திகதி இரவு ஆலயத்தை வந்தடைந்ததும் பொங்கல் விழா நடைபெறும்.
இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்ய வருகின்ற பக்தர்களுக்கான போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் என பல்வேறு வசதிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிவதை தவிர்த்து, கொள்ளைச் சம்பவங்களால் ஏற்படப்போகும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM