சேந்தாங்குளம் கடலில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்!

20 Mar, 2024 | 06:20 PM
image

சேந்தாங்குளம் கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

கடலில் நீராடச் சென்ற மூன்று பேரில் இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் ஒருவரின் சடலம் முதலில் கரையொதுங்கியது. 

தொடர்ந்து, நீரில் அடித்துச்‍செல்லப்பட்ட மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரது சடலமும் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தங்கன்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (வயது 37), சிவனேசன் திபிசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கு விருந்தினராக சென்றுள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர், விடுதியில் பணியாற்றும் இளைஞர், அவ்விருந்தினர் ஆகிய மூன்று பேருமே இன்று மாலை கடலில் நீராடச் சென்றனர்.

நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் மூழ்க, அவரை காப்பாற்றுவதற்காக மற்றையவர் முயன்றுள்ளார். இதன்போதே இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர் ;...

2024-11-08 15:50:11
news-image

3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து...

2024-11-08 22:49:30
news-image

சட்டவிரோத மரக்களஞ்சியசாலை வைத்திருந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான...

2024-11-08 21:24:25
news-image

மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச...

2024-11-08 21:19:51
news-image

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக...

2024-11-08 20:27:34
news-image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும்...

2024-11-08 20:18:10
news-image

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள்...

2024-11-08 20:10:49
news-image

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர்...

2024-11-08 19:31:51
news-image

தொழிற்சங்கங்களையும் ஊடகங்களையும் அடக்கி மக்களின் குரலை...

2024-11-08 17:23:14
news-image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை...

2024-11-08 18:42:46
news-image

அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

2024-11-08 19:23:54
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து...

2024-11-08 16:47:02