சாதனை படைக்கும் சூர்யாவின் 'கங்குவா' பட டீசர்

20 Mar, 2024 | 09:25 PM
image

நடிகர் சூர்யா வித்யாசமான வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் 'கங்குவா' படத்தின் டீசர் வெளியான 15 மணி தியாலத்திற்குள் 11 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது. 

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா' திரைப்படத்தில் சூர்யா, திஷா படானி, பாபி தியோல், நட்டி என்கிற நட்ராஜ், ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, வம்சி -பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இந்த டீசரில் சூர்யாவின் தோற்றமும், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதிலும் சூர்யா உச்ச ஸ்தாயில் 'பெருமாச்சி..' எனும் என எழுப்பும் குரல் எட்டு திக்கிலும் ஒலிக்கிறது. பான் இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.  

இந்திய மக்களவை தேர்தலுக்கான திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் தொடக்கம் வரை இருப்பதாலும், இப்படத்தின் வெளியீடு மே மாத இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right