அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

20 Mar, 2024 | 09:20 PM
image

எம்மில் சிலருக்கு இளம் வயதிலேயே மூட்டு பகுதியில் குறிப்பாக கால் மூட்டில் வலி ஏற்படும். பெரும்பான்மையானவர்கள் இதற்கு தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே பெறுவர். ஆனால் இது தவறு என்றும், மருத்துவரிடம் காண்பித்து முறையான பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் உங்களுக்கு அர்த்தாலஜியா எனப்படும் மூட்டு வலி ஏற்பட்டிருக்கக்கூடும். இதனை துல்லியமாக அவதானித்து உரிய சிகிச்சையை அளிக்காவிட்டால் ஊனம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கால் மூட்டு பகுதியில் மட்டும் அல்லாமல் உடம்பில் உள்ள ஏனைய மூட்டு பகுதிகளில் காயம் ஏற்பட்டாலும் அல்லது தொற்றுக்கள் ஏற்பட்டாலும், நோய் எதிர்ப்பு குறைபாடு இருந்தாலும், ஒவ்வாமைக்கான எதிர்வினைகள் நிகழ்ந்தாலும், சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய மூட்டு வலி பாதிப்பு ஏற்படக்கூடும். 

மூட்டு வலி ஏற்படும் இடத்தில் சிவந்திருத்தல் அல்லது வெப்பமாக இருத்தல், வீக்கம் உண்டாவது, இதன் காரணமாக நாளாந்த உடற்பயிற்சிகளான நடை பயிற்சி பாதிப்பு ஏற்படுவது, எழுதும்போது சிக்கல்கள் உண்டாவது, பாதிக்கப்பட்ட கால் மூட்டு பகுதி விறைப்பு ஏற்பட்டு மடக்க இயலாத நிலையில் இருப்பது.. இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். 

இதன் போது மருத்துவர்கள் பிரத்தியேக ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மூட்டு திரவ பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, எம் ஆர் ஐ பரிசோதனை எலக்ட்ரோகார்டியோகிராம் பரிசோதனை, வைரஸ் தொற்று பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிவர். இதனைத் தொடர்ந்து பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படும். மேலும் வலியை குறைப்பதற்காக சில இயன்முறை பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் பரிபூரண ஓய்வு மற்றும் பிரத்யேக உறையை அணிதல் ஆகியவற்றின் மூலமும் நிவாரணம் அளிப்பர். இதன்போது புகைப்பிடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். 

வைத்தியர் ராஜ் கண்ணா - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிட்டோனிட்டிஸ் எனும் அடிவயிற்று வீக்க பாதிப்பிற்குரிய...

2024-04-22 22:48:20
news-image

கிரானிக் ஹைவ்ஸ் எனும் நாட்பட்ட தோல்...

2024-04-21 07:24:48
news-image

கண் பாதிப்புகளுக்கான நவீன சிகிச்சை

2024-04-20 16:47:13
news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01