ரி - 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணம் நியூ யோர்க் நகரில் ஆரம்பம்

20 Mar, 2024 | 05:11 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் தனது சுற்றுப் பயணத்தை நியூ யோர்க் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) ஆரம்பித்தது.

'Out of this World' என்ற கருப்பொருளில் ரி20 உலகக் கிண்ணம் தனது சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த அதேவேளை, நினைவுச் சின்னங்களில் ஒன்றான எம்பயர் தேசிய கட்டடம் வர்ண மின்குமிழ்களால் ஒளிரப்பட்டது.

ரி20 உலகக் கிண்ணத்தை இரண்டு தடவைகள் வென்றெடுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணிகளில் இடம்பெற்ற கிறிஸ் கேல், ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் அலி கான் ஆகிய இருவரும் எம்பயர் தேசிய கட்டடத்தில் அலங்கரிக்கப்பட்ட மின்குமிழ்களை ஒளிரச் செய்தனர்.

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான உத்தியோகபூர்வ வர்ணங்களான கருநீலம் மற்றும் இளஞ்சிவப்பு (Navy blue and pink) ஆகிய வர்ணங்கள் எம்பயர் தேசிய கட்டடத்தின் உச்சியை அலங்கரித்தன.

ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் 2024 ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமாவதுடன் போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி நிகழ்ச்சி ஒன்று ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

ஐக்கிய அமெரிக்காவில் 3 இடங்களில் ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும்.

புதிதாக நிர்மாணிக்குப்பட்டுள்ள 34,000 ஆசனங்களைக் கொண்ட நியூ யோர்க், நசாவ் கவுன்டி சர்வதேச விளையாட்டரங்கு, டலாஸ் நகரில் புனர்நிர்மாணிக்கப்பட்ட க்ராண்ட் ப்ரெய்ரீ கிரிக்கெட் விளையாட்ரங்கு, லௌடஹில், ப்ரோவார்ட் கவுன்டி விளையாட்டரங்கு ஆகிய 3 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

நியூ யோர்க்கில் 8 போட்டிகளும் மற்றைய இரண்டு இடங்களில் தலா 4 போட்டிகளும் நடத்தப்படும்.

ஐசிசி ரி20 கிரிக்கெட் போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்துகின்றது.

மேற்கிந்தியத் தீவுகளில் அன்டிகுவா அண்ட் பாபுவா, பாபடோஸ், கயானா, செய்ன்ட் லூசியா, செய்ன்ட் வின்சன்ட், க்ரெனாடைன்ஸ், ட்ரினிடாட் அண்ட் டுபாகோ ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.

ரி20 உலகக் கிண்ணம் நான்கு கண்டங்களில் 15 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. கிரிக்கெட்டில் வளர்ச்சி கண்டு வரும் ஆர்ஜன்டீனா, பிரேஸில், கனடா ஆகிய நாடுகளுக்கும் இந்தக் கிண்ணம் கொண்டு செல்லப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11