இலங்­கை­யி­லி­ருந்து கன­டா­வுக்கு செல்லும் இலங்­கை­யர்­­ளுக்­காக தமது விசா கொள்­கையில் எவ்­வித மாற்­றத்­தையும் மேற்­கொள்­­வில்லை என கனடா அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

கனடா நாட்­டுக்கு செல்லும் இலங்­கை­யர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்­றுலா அடிப்­­டையில் பிர­வே­சிக்க முடியும் என வெளி­யா­கி­யி­ருந்த தக­வல்­களை நிரா­­ரித்து கொழும்­புக்­கான கனே­டிய உயர் ஸ்தானி­­ரா­லயம் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

அவ்­­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­­தா­வது,

இலங்­கை­யி­லி­ருந்து வர்த்­தக நட­­டிக்­கை­­ளுக்­கா­கவோ அல்­லது சுற்­றுலா பய­ணி­­ளா­கவோ கன­டா­வுக்கு செல்லும் இலங்­கை­யர்கள் தொடர்ந்தும் விசா அனு­­தியைப் பெற வேண்­டி­யது அவ­சியம். சட்­­ரீ­தி­யான விசா அனு­­தியை பெற்ற நபர்­­ளுக்கே கனடா நாட்­டுக்குள் பிர­வே­சிப்­­தற்­கான அனு­மதி வழங்­கப்­படும்.

மேலும் இலங்­கை­யி­லி­ருந்து கன­டா­வுக்கு செல்லும் இலங்­கை­யர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்­றுலா அடிப்­­டையில் பிர­வே­சிக்க முடியும் என வெளி­யா­கி­யி­ருந்த தக­வல்கள் அடிப்­­டை­யற்­­வை­யாகும். நாட்­டுக்கு வரும் சக­லரும் சட்­­ரீ­தி­யான விசா அனு­­தியை பெற்ற பின்­னரே நாட்­டுக்குள் அனு­­திக்­கப்­­டுவர். இலங்­கை­யர்­­ளுக்­காக தமது நாட்டின் வீசா கொள்­கையில் எவ்­வித மாற்­றத்­தையும் மேற்கொள்ளவில்லை.  

கனடாவுக்கு வருவதற்கு முன்னர் தமது நாட்டின் விசா குறித்த தெளிவுப்படுத்தல்களை பெற்றுக்கொள் ளுமாறு  கனேடிய அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது