(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியல் தலையீடுகள் மற்றும் நாட்டின் நிதிக்கொள்கை குடும்பமயமாவதில் இருந்து தடுப்பதற்கே மத்திய வங்கியை சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அதனை பயன்படுத்திக்கொண்டு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70வீதம் வரை அதிகரித்துக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் நிதிக் கொள்கையை அரசியல் ரீதியிலான தலையீடுகள் இன்றி நடைமுறைப்படுத்துவதற்காகவே மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை ஊக்குவித்ததன் காரணமாக இந்நாட்டின் நிதிக்கொள்கை குடும்பமயமானது. எனவேதான் இதனை சுயாதீன கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், மத்திய வங்கி, நாட்டில் பாரிய நிதி நெருக்கடி இருப்பதென தெரிவித்து தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு தியாகங்களை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, மறுபுறம் மத்திய வங்கி ஊழியர்களுக்கு 70 வீத சம்பள உயர்வை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு செயற்பட மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை.
மத்திய வங்கியை குடும்பமயமாவதில் இருந்து சுயாதீனப்படுத்தி, அரசியல் தலையீடுகளை நிறுத்துவதற்காகும். ஆனால் அதனை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான முறையில் சம்பளத்தை அதிகரித்துக்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை.
அதனால் மத்திய வங்கி தங்களின் ஊழியர்களுக்கு அநியாயமான முறையில் அதிகரித்துள்ள சம்பளத்தை மீள திருப்பிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM