(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் அரசாங்கத்துக்கும்,நிதியமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்துள்ள அறிக்கையை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதன் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு நாங்களும் உடன்படவில்லை.சம்ப ள அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் அரசாங்கத்துக்கும்,நிதியமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஆகவே சம்பள அதிகரிப்புடன் அரசாங்கம்,நிதியமைச்சை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் இந்த விடயத்தில் சிறந்த நிலைப்பாட்டில் உள்ளார்.ஆனால் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகிறது.சம்பள அதிகரிப்பு முரணானது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர், புதிய மத்திய வங்கி சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
மத்திய வங்கியின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளார்.
ஆகவே இவ்விடயம் குறித்து முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். அரசாங்க நிதி தொடர்பான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM