(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 200 மதுபான அனுமதிப் பத்திரங்களை விநியோகித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டன.இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளது.
தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு பணம் சேகரிப்பதற்கான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது தொடர்பில் கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு நான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன். இந்த சட்டவிரோத மதுபான உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM