2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதையில் கொமர்ஷல் வங்கி

Published By: Vishnu

20 Mar, 2024 | 02:05 AM
image

கொமர்ஷல் வங்கிக் குழுமம் 2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் 56.816 பில்லியன்களை மாதாந்தம் சராசரியாக 18.939 பில்லியன்கள் என்ற ரீதியில் கடனாகக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வருட இறுதியில் வங்கியின் கடன் புத்தகம் 1.296 ட்ரில்லியன்களாக பதிவாகி உள்ளது. பொருளாதார சீராக்கத்துக்கு உதவும் வகையில் கடன் வழங்கும் போக்கில் உறுதியானதோர் நிலை இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31ல் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் வைப்பும் அபிரிமிதமாக அதிகரித்து 109.408 பில்லியன்களாக உள்ளது. இதன் மாதாந்த சராசரி 36.469 பில்லியன்களாகும். இது வங்கியின் உறுதியான வைப்பு தளத்தை வெளிப்படுத்துவதோடு கொந்தளிப்பு மிக்க நுண் பொருளாதார நிலைகளிலும் நிதி இடை நிலையில் கவனம் செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. வைப்பு வளர்ச்சி வருடத்துக்கு வருடம் 8.6 வீதமாக வளர்ச்சி கண்டு மீளாய்வுக்கு உட்பட்ட காலப் பகுதியில் 2.148 ட்ரில்லியன்களாக உள்ளது.

இந்தக் குழுமம் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக வங்கியையும், அதன் இணை மற்றும் கிளை நிறுவனங்களையும் உள்ளடக்கியது. இலங்கையின் பங்கு பரிவர்தனையில் அது தாக்கல் செய்துள்ள அறிக்கையின் படி குழுமத்தின் மொத்த சொத்துக்கள் 156 பில்லியன்களால் அல்லது வருடத்துக்கு வருடம் 6.24 வீதத்தால் அதிகரித்து மீளாய்வுக்கு உட்பட்ட காலப் பகுதியில் 130 பில்லியன்களாக அல்லது 5.15 வீதமாக காணப்பட்டு 2023 டிசம்பர் 31ல் 2.656 ட்ரில்லியன்களாக உள்ளது.

மொத்த வருமானம் வருடத்துக்கு வருடம் 21.82 வீதத்தால் அதிகரித்து 2023 இறுதிக் காலாண்டில் 33.44 வீத அதிகரிப்புடன் 341.566 பில்லியன்களாக உள்ளது. மேலும் வட்டி வருமானம் 33.84 வீதத்தால்; அதிகரித்து 297.646 பில்லியன்களாக உள்ளது என குழுமம் அறிவித்துள்ளது. வட்டிச் செலவினம் மிகவும் அதிகரித்து 211.231 பில்லியன்களாக உள்ளது. எவ்வாறேனும் முந்திய காலாண்டின் எதிர்மறை வளர்ச்சியில் இருந்து மீண்டு தேறிய வட்டி வருமானத்தை நாலாம் காலாண்டில் 25.534 பில்லியன்களாக பதிவு செய்துள்ளது. இது 16.85 வீத வளர்ச்சியாகும்.

“நாம் எமது ஐந்தொகையை தொடர்ச்சியாக வலுவூட்டி வருடம் முழுவதும் அதை உறுதியான நிலையில் பேணி இலங்கையின் முன்னணி தனியார் வங்கி என்ற அந்தஸ்த்தை மீண்டும் உறுதி செய்துள்ளோம்” என்று கூறினார் வங்கியின் தலைவர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன. “எமது கட்டுக் கோப்பான செயற்பாடு எமது மீள் எழுச்சிக்கும்; வாடிக்கையாளர்கள் மற்றும் பங்கு தாரர்கள் மீதான எமது தொடர் அர்ப்பணத்துக்கும் சேவைக்குமான சாட்சியமாகவும் அமைந்துள்ளது. இந்த வெற்றிகளின் அத்திவாரத்தை நாம் தொடர்ந்தும் கட்டியெழுப்ப எண்ணியுள்ளோம். அத்தோடு எதிர்காலத்தில் செழுமையின் புதிய உச்சங்களைத் தொடவும் நாம் உத்தேசித்துள்ளோம்” என்றார் அவர்.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க இது பற்றிக் கூறுகையில் கொமர்ஷல் வங்கி அதன் அசைக்க முடியாத உறுதியையும் இசைவாக்கத்தையும் பொருளாதார மீள் எழுச்சி மற்றும் மறுசீராக்கம் என்பனவற்றுக்கு மத்தியிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றது.

“கடைசியாக நிறைவடைந்த ஆண்டுகளில் நாடு எதிர்நோக்கிய சவால்களுக்கு நடுவே எமது கவனம் செலுத்தும் மூலோபாயம் பங்குதாரர் பங்கிலாபத்துக்கான அர்ப்பணம் என்பனவும் மிக உறுதியான நிலையில் உள்ளன” என்று அவர் மேலும் கூறினார். “முக்கியமான மாற்றங்களைத் தழுவிக் கொண்டு ஆக்கபூர்வமான அணுகுமுறைகளையும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் நாம் முன்சென்று சகல பங்குதாரர்களுக்கும் ஸ்திரப்பாட்டையும் நிலைத்தன்மை பெறுமானங்களையும் உறுதி செய்துள்ளோம்.

துயரங்களின் போதான எமது மீள் எழுச்சியும் இசைவாக்கமும் எமது ஒட்டு மொத்த கொமர்ஷல் வங்கி குழுமத்தினதும் அர்ப்பணம் மற்றும் மனஉறுதி என்பனவற்றுக்கான சாட்சியங்களாகவும் அமைந்துள்ளன. இவையே எமது வெற்றிகளின் தாரக மந்திரமாகவும் அமைந்துள்ளன” என்று அவர் மேலும் விளக்கினார். 

நிதிச் சேவைகளுக்கான வரிக்கு முந்திய செயற்பாட்டு இலாபமாக குழுமம் மொத்த ஆண்டிலும் 38.885 பில்லியன்களைப் பதிவு செய்துள்ளது. இது நாலாம் காலாண்டில் 10.193 பில்லியன்களாக உள்ளது. இது முறையே 36.77 வீதம் மற்றும் 253.81 வீதங்களாகும். முன்னைய ஆண்டை விட நாலாம் காலாண்டில் குறைபாடுகளுக்கான ஒதுக்கீட்டு அதிகரிப்பே இதற்கு காரணமாகும்.

குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் 12 மாத காலத்துக்குமாக 33.927 பில்லியன்களாகப் பதிவாகி உள்ளது. இது 38.45 வீத அதிகரிப்பைக் காட்டுகின்றது. மூன்றாம் காலாண்டில் இது 13.56 வீதமாக இருந்தது. 12 மாத காலத்துக்கான வருமான வரி அதிகரித்து 12.027 பில்லியன்களாக உள்ளது. குழுமம் தேறிய இலாபமாக 21.900 பில்லியன்களைப் பதிவு செய்துள்ளது. இது வருடத்துக்கு வருடம் 2.5 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

வங்கியின் Tier 1 மற்றும் மொத்த மூலதன விகிதமாக முறையே 11.442 வீதம் மற்றும் 15.151 வீதமாக 2023 டிசம்பர் 31ல் காணப்படுகின்றது. இவை இரண்டுமே சட்டப்படி வேண்டப்படும் ஆகக் குறைந்த வீதமான முறையே 10 வீதம் மற்றும் 14 வீதமாகும். வங்கியின் வட்டி எல்லை மீளாய்வுக்கு உரிய ஆண்டில் 3.32 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.74 வீதமாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும் வட்டி எல்லை குறிப்பிட்ட ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் வளர்ச்சி காண ஆரம்பித்தது. சொத்துக்கள் மூலமான வங்கியின் வருமானம் (வரிக்கு முன்) 1.27 வீதமாகக் காணப்பட்டு குறிப்பிட்ட ஆண்டின் பங்கொன்றின் மீதான வருமானம் 9.78 வீதமாக உள்ளது.

கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி மூலோபாய ரீதியாக கிளை வலையமைப்பை கொண்டுள்ளதுடன் 950 க்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கித் தலைவர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன (இடது) வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க ஆகியோர் படத்தில்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55
news-image

இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Plug-in...

2024-08-15 15:16:18
news-image

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது...

2024-08-15 14:31:40
news-image

இளம் தொழில்முனைவோரை வலுப்படுத்தல் : சிறு...

2024-08-13 21:09:24
news-image

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன்...

2024-08-09 16:42:11