ரோஹித்த அபேகுணவர்தனவின் நியமனம் பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடு - நளின் பண்டார

Published By: Vishnu

19 Mar, 2024 | 07:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஆளும் தரப்பின்  உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவை  கோப் குழுவின் தலைவராக நியமித்து பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இந்த தவறு திருத்தம் செய்யப்பட வேண்டும். ரோஹித அபேகுணவர்தனவை பதவி நீக்கி தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற  அமர்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கோப் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் இந்த வலியுறுத்தலை அரசாங்கத்திடம் முன்வைக்கிறேன்.பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு  முக்கியமானது.கோப் குழுவின்  தலைவர் கணக்காளர் நாயகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.கோப் குழுவின் தலைவராக ஆளும் தரப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். கோப குழுவின் உறுப்பினர் பதவியில்  இருந்து எரான் விக்கிரமரத்ன விலகியுள்ளார்.

கோப் குழுவின் தலைவர் நியமனத்தில் இவ்வாறான முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அதிகாரிகள் எவ்வாறு குழுவில் முன்னிலையாகுவார்கள்.கோப் குழுவின்  தலைவராக ரோஹித்த அபேகுணவர்தனவை நியமித்து  பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

தவறை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும்.ஆகவே ரோஹித்த அபேகுணவர்தனை தலைவர் பதவியிலிருந்து  நீக்கி பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய  கோப் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23