செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

20 Mar, 2024 | 09:17 AM
image

இன்றைய சூழலில் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு திடீரென்று அவர்களுடைய முகம், முதுகு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் தோலின் வளர்ச்சி இயல்பான அளவைவிட கூடுதலாக உண்டாகி, செபோர்ஹெக் கெரடோசிஸ் என்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தற்போது நவீன வடிவிலான லேசர் சிகிச்சை அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை அளிக்கிறது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

செபோர்ஹெக் கேரட்டோசிஸ் எனும் பாதிப்பு முதியவர்களிடத்தில் காணப்படும் தீங்கற்ற புற்றுநோய் பாதிப்பாகும். இவை ஆரோக்கியத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தாது என்றாலும், அவர்களது தோற்றம் மற்றவர்களுக்கு அவலட்சணமாக தோன்றுவதால்.. இவர்களின் சமூக தொடர்பு என்பது குறைந்து விடும். இது பொதுவாக முகம், முதுகு, தோள்பட்டை, மார்பு, உச்சந்தலை போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடும். 

இதன் போது அபிரிமிதமான வளர்ச்சி தோலில் ஏற்படும். சிலருக்கு இதன் வளர்ச்சி சில சென்டிமீற்றர் அளவிற்கு நீண்டு தொங்கும். சிலருக்கு வட்ட வடிவத்திலும், சிலருக்கு ஓவல் வடிவத்திலும், கருப்பு மற்றும் பழுப்பு வண்ணத்திலும் உண்டாகும். வெகு சிலருக்கு மட்டும் இதிலிருந்து பிரத்யேக திரவம் வெளியேறும். மேலும் சிலருக்கு வலி உண்டாகும். அதே தருணத்தில் ஆடைகள் அணியும் போது பிரத்யேக அசௌகரியங்களும் உண்டாகக்கூடும். மேலும் சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தக்கூடும். 

மரபியல் மாற்றங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என விவரிக்கும் மருத்துவர்கள், இதனை திசு பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிகிறார்கள். மேலும் இதற்கு கிரையோதெரபிஎன்ற உறை நிலை சத்திர சிகிச்சை மூலமாக நிவாரணத்தை அளிக்கிறார்கள். வெகு சிலருக்கு மின் அதிர்வு சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் தருகிறார்கள். தற்போது இதற்கு நவீன வடிவிலான லேசர் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது. வெகு சிலருக்கு மட்டுமே பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. 

இத்தகைய பாதிப்பிற்கு சிகிச்சை அவசியமில்லை என்றாலும், அவர்களுக்கு ஏற்படும் அரிப்பு, வலி, அசௌகரியங்கள் ஆகியவற்றை பொருத்து நிவாரண சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 

வைத்தியர் தீப்தி - தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிட்டோனிட்டிஸ் எனும் அடிவயிற்று வீக்க பாதிப்பிற்குரிய...

2024-04-22 22:48:20
news-image

கிரானிக் ஹைவ்ஸ் எனும் நாட்பட்ட தோல்...

2024-04-21 07:24:48
news-image

கண் பாதிப்புகளுக்கான நவீன சிகிச்சை

2024-04-20 16:47:13
news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01