இன்றும் எம்மில் பலரும் சனி பகவான் என்றால் பதறுவர். கதறுவர். ஏனெனில் ஏழரைச் சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, கண்டகச் சனி, விரைய சனி என ஏராளமான சனி பகவானின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ... உங்களுடைய நாளாந்த நடவடிக்கைகளில் சோம்பல் தன்மை ஏற்பட்டு, திட்டமிடப்பட்ட காரியங்களைச் செய்யத் தவறினாலோ.. அல்லது நாளாந்தம் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க தவறினாலோ...நீங்கள் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சனி பகவான் உங்களது ஜாதகத்தில் எந்த கட்டத்தில் நின்று திசை நடத்துகிறாரோ அல்லது பார்வை இடுகிறாரோ... அதற்கேற்ப உங்களுக்கு கர்ம பலன்கள் கிட்டும். சனி பகவான் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் நின்று திசை நடத்தினால் ..அது கர்ம பலனை கொடுத்தே தீரும். இதன் போது உங்களையோ அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆயுள் ஸ்தானத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி.. மரணத்தை உண்டாக்கக் கூடும்.
இத்தகைய பாதிப்பிலிருந்து விலகுவது கடினம் என்றாலும்... பாதிப்பின் வீரியத்தை குறைத்துக் கொள்ள எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வட தமிழகத்தில் அமையப்பெற்றிருக்கும் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் எனும் நகரில் வீற்றிருந்து அருள்பாளிக்கும் பெரிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்கள். இங்கு அனுமானின் பாதத்தில் சனி பகவான் இருப்பதைக் காணலாம். சனி தோஷத்தின் பிடியில் சிக்கி இருக்கும் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
இங்கு வழிபட வேண்டிய முறை குறித்து இந்த ஆலயத்தில் இறை ஊழியம் செய்யும் அன்பர்களிடத்தில் விரிவாக கேட்டு அறிந்து கொண்டு அதனை முறைப்படி செய்தால் சனி தோசத்தின் பாதிப்பு முழுமையாக விலகும். சனி தோசத்தினால் தடைப்பட்டிருக்கும் திருமணம் மற்றும் புத்திர பேறு நிவர்த்தியாகி அந்த பாக்கியம் கிடைக்கும். மேலும் இங்கிருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆணை முதுகு எனும் இடத்தினை பற்றி துல்லியமாக தெரிந்து கொண்டு, ஆஞ்சநேயரின் பாதம் பட்ட இடத்தையும் சென்று தரிசிக்க வேண்டும்.
இதன் பிறகு தாயகம் திரும்பி தூய்மை பணியாளர்களுக்கு கருப்பு வண்ணம் அல்லது நீல வண்ணத்தில் வஸ்திரங்களை புதிதாக வாங்கி அவர்கள் பாவிக்கும் வகையில் தானமாக வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்க வேண்டும். இதனை பரிகாரமாக செய்வதன் மூலம் உங்களுக்கு சனி தோஷத்தின் ஆதிக்கம் குறைந்து சனி பகவானின் தொல்லை மறையும். மனதில் உள்ள கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM