(எம்.எம்.சில்வெஸ்டர்)
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவரான வனிந்து ஹசரங்கவை, இலங்கை டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணிக்கு வனிந்து ஹசரங்க உள்வாங்கப்பட்டுள்ளார்.
சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெற்றார். இவர், இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 196 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இலங்கை டெஸ்ட் குழாம் விபரம்
தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), குசல் மெண்டிஸ் (உப அணித்தலைவர்) , திமுத் கருணாரட்ண, நிஷான் மதுஷ்கா, எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதாரா, வனிந்து ஹசரங்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ்,. நிஷான் பீரிஸ், கசுன் ரஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க குணசேகர.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM