குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி

20 Mar, 2024 | 09:37 AM
image

(எம்.மனோசித்ரா)

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 25 மாவட்டங்களில் சமுர்த்திப் பயனாளிகள் உள்ளிட்ட 2.74 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியதாக, ஒரு குடும்பத்திற்காக 10 கிலோக்கிராம் நாட்டரிசியை இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு படிமுறைகளை மேற்கொண்டுள்ளது. 

அடையாளங் காணப்பட்ட குறைந்த வருமானங் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இவ்வாண்டிலும் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள், அரசாங்க அதிபர் மூலமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைந்த வருமானங் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோக்கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:14:18
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06