லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளாக ஜனபத்திய பகுதியில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு இடம் பெற்றுள்ளது எனவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நேற்று திங்கட்கிழமை (18) காலை வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தின் மேல்மாடி ஊடாக இரண்டாவது நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 80,675 ரூபாய் பணமும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் சிகரெட் பெட்டிகளையும் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை. நுவரெலியா தடயவியல் பொலிஸாரோடு இணைந்து லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM