காலி சிறைச்சாலைக்குள் வெளியிலிருந்து வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொதியொன்றை கைப்பற்றிய சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பதாக மலர் வளையம் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த சிறைச்சாலையின் அதிகாரி நேற்று (18) மாலை தனது வீட்டின் கதவை திறக்க முற்பட்ட போது வீட்டுக்கு முன்பதாக மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை அவதானித்து இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி சிறைச்சாலையின் வெளிபுறத்திலிருந்து நபரொருவர் சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திற்குள் தடைசெய்யப்பட்ட பொதி ஒன்றை வீசிய நிலையில் கடமையில் இருந்த இந்த சிறைச்சாலை அதிகாரி பொதியை கைப்பற்றியுள்ளார். இந்த பொதி கைப்பற்றப்பட்ட இடத்துக்கு அருகில் கைதி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவதாக கிடைத்த தவலின் பேரில் சிறைச்சாலை அதிகாரிகள் கைதி ஒருவரை விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான சிறைச்சாலை கைதி வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM