மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாததையடுத்து வைத்தியசாலையின் அசமந்த போக்கே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) காலை வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சைக்காகத் திருகோணமலை, அம்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நோய்க்கான சிகிச்சையைப் பெறுவதற்காக அதிகமான நோயாளர்கள் வருவது வழமை.
இந்த நிலையில் குறித்த கதிர்வீச்சு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதாகவும் இதனைத் திருத்தும் நபர் இங்கு இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் அல்லது கொழும்பிலிருந்து வரவேண்டியுள்ளதால் குறித்த தினத்தில் சிகிச்சையைப் பெறமுடியாமல் போகின்றது
இதனால் பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் பிரயாணித்து வைத்தியசாலையைக் காலையில் சென்று அங்கு இரவு வரை காத்திருந்து சிகிச்சை பெறமுடியாமல் ஏமாறிச் செல்ல வேண்டியதுடன் உரிய காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சையை பெறமுடியாததால் நோய் அதிகரித்து உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால் அதனை திருத்தும் ஒருவரை இங்கு நியமித்திருக்க வேண்டும் அதைவிடுத்து இயந்திரம் திருத்துபவர் இருண்டு அல்லது மூன்று தினங்களின் பின்னர் வரும்வரை நோயாளர்கள் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் கவனம் கொண்டு இதற்கான தீர்வினை பெற்று தருமாறு நோயாளர்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தன்.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் திருமதி கணேசலிங்கத்துடன் தொடர்பு கொண்டபோது அவர் இது தொடங்கிய காலத்தில் இதற்கான எஞ்சினியர் இருந்தார் பின்னர் அவர் இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரை அந்த கம்பனி பாவித்து வருகின்றது.
இருந்தபோதும் பழுதடைந்து நேரத்தில் இன்று அவர் இங்கு இல்லை எனவே அவரை போல் ஒருவரை இங்கு கடமைக்கு நியமிக்குமாறு குறித்த கம்பனிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன் எனவே எதிர்வரும் நாட்களில் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM