(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை முன்னிட்டு பலம்வாய்ந்த வீரர்களைக் கொண்ட குழாத்தை பங்களாதேஷ் பெயரிட்டுள்ளது.
சில்ஹெட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் முன்னாள் தலைவர் லிட்டன் தாஸ் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடரின்போது அவர் தந்தை பேற்றை அடைய இருந்ததால் அவருக்கு விடுகை வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவர் அணித் தலைவராக இருந்தார்.
அதன் பின்னர் மூவகை கிரிக்கெட் அணிகளுக்கும் நஜ்மல் ஹொசெய்ன் ஷன்டோ தலைவராக நியமிக்கப்பட்டார்.
டெஸ்ட் அணியின் முழு நேர தலைவராக நஜ்முல் நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரே அவருக்கு முதலாவது பலப்பரீட்சையாக அமையவுள்ளது.
அணிக்கு மீளழைக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ் 39 டெஸ்ட் போட்டிகளில் 2394 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 28 போட்டிகளில் அவர் விக்கெட் காப்பாளராக விளையாடியுள்ளார்.
உபாதையிலிருந்து குணமடைந்து பூரண உடற்தகுதியைக் கொண்டுள்ள சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஈபாடொத் ஹொசெய்ன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் உபாதை காரணமாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.
அவருடன் அனுபவம்வாய்ந்த புதிய வேகப்பந்துவீச்சாளர்களான நஹிப் ரானா, முஷ்பிக் ஹசன் ஆகியோரும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் நஹிப் ரானா தற்போதைய அதிவேகப்பந்துவீச்சாளராக கருதப்படுகிறார்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி சட்டோக்ராமில் மார்ச் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பங்களாதேஷ் குழாம் (1ஆவது டெஸ்ட்)
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), ஸக்கிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜோய், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் குமர் தாஸ், மொமினுள் ஹக் ஷவ்ராப், முஷ்பிக்குர் ரஹிம், ஷஹாடத் ஹொசெயன் டிப்பு, மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தய்ஜுல் இஸ்லாம், ஷொரிபுல் இஸ்லாம், சையத் காலித் அஹ்மத், முஷ்பிக் ஹசன், நஹித் ரானா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM