இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் - பிரித்தானிய தமிழர் பேரவை

Published By: Vishnu

19 Mar, 2024 | 01:25 AM
image

இலங்கை அரசும், அதன் இராணுவ மற்றும் பொலிஸ் நிர்வாகங்களும் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் கைதுகள், நில அபகரிப்புக்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இடையூறுகளை வன்மையாகக் கண்டிப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அண்மையில் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்து பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஆலயப்பூசகர் மற்றும் பக்தர்கள் கைது கண்டனத்துக்குரியதுடன், அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். மேலும் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்களை மீளக்கையளிப்பதுடன், அவற்றை அபகரித்த குற்றவாளிகளைக் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்திருக்கவேண்டிய அரச நிர்வாகம், அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபாட்டில் ஈடுபட்டுவரும் தமிழ்மக்கள்மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களைப் போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தமையினால்தான் இன்று அது கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறான கைதுகளும், தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளைத் தடுத்து அவர்களது வழிபாட்டுத்தலங்களை அபகரிப்பதும், தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும், தமிழ்மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்துத் துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப்பரப்பினைக் கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பதும் இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பின் திட்டமிடப்பட்ட மூலோபாயமாகும். 

நல்லிணக்கம் பற்றிப் பேசும் ரணில் அரசு, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது இலங்கையில் நிலையான அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி என்பன ஒருபோதும் சாத்தியப்படாது என்பதையே காண்பிக்கின்றது. இதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச தளத்தில் தீர்மானிக்கும் சக்திகளிடம் எடுத்துரைக்கவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29
news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04